search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலை வாய்ப்பு முகாம்"

    • பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
    • 54-க்கு ் மேற்பட்ட மாணவர்களை தேர்ந்தெடுத்து பணி நியமன ஆணையை வழங்கினார்.

    மாரண்டஅள்ளி, 

    தருமபுரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள மாதம்பட்டி மில் ஸ்ரீ மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் துறை மாணவர்களுக்கு சென்னை டர்போ எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

    இதில் கல்லூரியின் தலைவர் கோவிந்தராஜ் தலைமை உரையாற்றினார். பொருளாளர் ராஜாக்கவுண்டர் மற்றும் செயல் இயக்குனர் மாதுளம் பூ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    கல்லூரியின் முதல்வர் கந்தசாமி வரவேற்று பேசினார். டர்போ எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு அலுவலர் நடராஜன் மாணவர்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தியும் சுமார் 54-க்கு ் மேற்பட்ட மாணவர்களை தேர்ந்தெடுத்து பணி நியமன ஆணையை வழங்கினார்.

    முகாமின் முடிவில் மின்னணுவியல் துணைத் தலைவர் தேவன் நன்றி கூறினார்.

    • 800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
    • கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தும், இணைய தள முகவரியிலும் ஏராளமா னோர் ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாநகராட்சி சார்பில் வரும் 11ம் தேதி, திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி வளாகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு திருவிழா நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்று தங்கள் நிறுவனத்தில் உள்ள பணியிட ங்களுக்கு தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய 800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இதில் கலந்து கொண்டு தங்கள் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பைப் பெறுவதற்காக 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இதற்காக வெளியிடப்பட்டுள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தும், இணைய தள முகவரியிலும் ஏராளமா னோர் ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

    பள்ளி மற்றும் கல்லுாரி களில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், வேலை தேடுவோர் மற்றும் தங்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு தேடுவோர் பதிவு செய்து, பங்கேற்று பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாம் குறித்து பல்வேறு பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சமூக வலை தளங்களில் இந்த முகாம் குறித்து மேயர், கலெக்டர், கமிஷனர் ஆகியோர் வேண்டுகோள் விடுக்கும் பதிவுகள் வைரலாகி வருகிறது.

    முகாமுக்கான அரங்குகள் அமைக்கும் பணியை மேயர் தினேஷ்குமார், கலெக்டர் வினீத், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார். சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    • 'மெகா' தனியார் வேலைவாய்ப்பு முகாம் - சிக்கண்ணா அரசு கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.
    • 34 பல்வேறு துறை சார்ந்த வேலைவாய்ப்பு தரும் நிறுவனங்கள் நுாற்றுக்கணக்கில் பங்கேற்கவுள்ளன.

    திருப்பூர் : 

    திருப்பூரில் வரும், 11ம் தேதி நடைபெறும் மெகா வேலை வாய்ப்பு முகாமில், 25 ஆயிரத்துக்கும் மேற்ப ட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முயற்சி மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, திருப்பூர் மாநகராட்சி சார்பில் 'மெகா' தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும், 11ம் தேதி காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை, சிக்கண்ணா அரசு கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.

    தகவல் தொழி ல்நுட்பம், கணினி துறை சார்ந்த நிறுவனங்கள், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், கெமிக்கல், ஓட்டல், சுற்றுலா துறை, ஷிப்பிங், போக்குவரத்து, தளவாட உற்பத்தி நிறுவனங்கள், ஜவுளி, வங்கி துறை சார்ந்த நிறுவனங்கள் என, 34 பல்வேறு துறை சார்ந்த வேலைவாய்ப்பு தரும் நிறுவனங்கள் நுாற்றுக்கணக்கில் பங்கேற்க வுள்ளன.

    • நிப்பான்-எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
    • 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ந்தெடுத்து பணி நியமன ஆணையை வழங்கினார்கள்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள மாதம்பட்டி ஸ்ரீ மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஓசூர்- இந்தியா நிப்பான்-எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

    இதில் கல்லூரியின் தலைவர் கோவிந்தராஜ் தலைமை உரையாற்றினார். பொருளாளர் ராஜாக் கவுண்டர் மற்றும் செயல் இயக்குனர் மாதுளம் பூ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கல்லூரியின் முதல்வர் கந்தசாமி வரவேற்று பேசினார். இந்தியா நிப்பான் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள் சரவணன் உதவி மேலாளர் லட்சுமிபதி மற்றும் அலுவலர்கள் ஆகியோர் மாணவர்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தியும் சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ந்தெடுத்து பணி நியமன ஆணையை வழங்கினார்கள்.

    இம்முகாம் ஏற்பாடு களை அனைத்து துறை தலைவர்கள் மற்றும் ஆசிரியை பெருமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந் தார்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட பணி நியமனம் பெற்ற அனைத்து மாணவர்களையும் இக்கல்லூரியின் தலைவர் கோவிந்தராஜ் மற்றும் இயக்குனர்களும் வெகுவாக பாராட்டினார்கள் இம்முகாமின் முடிவில் மின்னனுவியல் துறை தலைவர் தேவன் நன்றியுரை வழங்கினார்.

    • 3-ந்தேதி நடக்கிறது
    • காலை 10 மணிக்கு தொடங்குகிறது

    வேலூர்:

    விஐடியில் வேலைவாய்ப்பு துறையும் இயந்திரவியல் துறையும் இணைந்து வரும் பிப்ரவரி மாதம் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வி.ஐ.டி. அண்ணா அரங்கத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வளாக நேர்முக தேர்வு நடத்துகிறது.

    இந்த தேர்வில் கலந்து கொள்ள கல்லூரியில் டிப்ளமோ இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகள் மற்றும் டிப்ளமோ, பட்டய படிப்பை முடித்தவர்களும் கலந்து கொள்ளலாம். இந்த வளாக நேர்முகத் தேர்வுக்கு இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனமான ஃபாஸ்ட் சோலார் ,டி.வி.எஸ் வேலியோ, பிரேக்ஸ் இந்தியா , இன்டோ கூல், டெக்னிப் எனர்ஜிஸ், மெக்டர் மார்ட் மேலும் பத்திற்கு மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

    இதற்கான நுழைவு சீட்டினை தாங்கள் பயிலும் கல்லூரி முதல்வரிடம் பெற்றுக் கொள்ளவும்.டிப்ளமோ படித்து முடித்தவர்கள் விஐடியில் உள்ள சில்வர் ஜூப்ளி டவர் 7-வது மாடி, அறை எண் 717 ல் பிப்ரவரி மாதம் 1-ம் தேதிக்குள் அனைத்து வேலை நாட்களில் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த நேர்முகத் தேர்விற்கு வருவோர்கள் பயோடேட்டா கல்வி சான்றிதழ்கள், ஆதார், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து வரவேண்டும்.

    இதில் வேலூர் மாவட்டம் மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டத்தை சேர்ந்த டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை, டிப்ளமோ படித்தவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு விஐடி வேந்தர் டாக்டர் .கோ விசுவநாதன் கூறினார்.

    • மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் 30க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.
    • வட்டார மேலாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் பல்லடம்,பொங்கலூர் வட்டார அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் 30க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் 242 இளைஞர்கள் கலந்து கொண்டனர் .அதில் 74 நபர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். திறன் பயிற்சிக்கு 31 நபர்கள் தேர்வாகினர். 15 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டது. மேலும் 23 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.6 கோடி தர மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் முத்து, ஜோசப் ரத்னராஜ், விஜயகுமார், மாவட்ட வள பயிற்றுநர் முனிராஜ், பல்லடம் வட்டார தொழில் மைய அலுவலர் ஹரிகரன், மற்றும் பல்லடம், பொங்கலூர், வட்டார மேலாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • முகாமை வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைக்கிறார்.

    மதுரை

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை தி.மு.க.வினர் இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடி வருகின்றனர்.

    இதனை முன்னிட்டு வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை) மதுரை கூடல் நகரில் உள்ள செயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமை வணிகவரித்து றை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைக்கிறார்.

    இதில் டி.வி.எஸ்., அசோக் லைலாண்ட், ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியுடைய இளைஞர்களை தேர்வு செய்து வேலை வழங்கு வதற்கான ஆணையும் வழங்குகிறார்கள்.

    முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்ப தினால் இளைஞர்கள் பங்கு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜி.பி. ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல். ஏ. ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • பயிற்சி முகாம் திட்ட இயக்குனர் ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்றது.
    • முகாமில் 624 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    சூளகிரி,

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பாக சூளகிரி வட்டார அளவில் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் திட்ட இயக்குனர் ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் 624 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் 26 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு தனியார் துறை நிறுவனங்களில் 126 நபர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் உதவி திட்ட அலுவலர்கள், வட்டார மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
    • வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இம்முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ, பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.

    மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணிவாய்ப்பினை பெற்றுக்கொள்ளுமாறு கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • 50 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாக ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வருகிற 27-ந் தேதி பொள்ளாச்சியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கோவையில் நடந்தது. இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் அமைச்சர் கணேசன் கூறும்போது,

    பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 11 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களை (ஐ.டி.ஐ) சேர்த்து 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. 50 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாக ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், வெளிநாடுகளை போல ஆட்டோமிசின், ரோபோடிக் பயிற்சிகள் வழங்கும் நவீனமான தொழிற்பயிற்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன், போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ஆட்சேர்ப்பு முகாம் வருகின்ற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று தருமபுரி மாவட்ட பெரியார் மன்றத்தில் நடைபெற உள்ளது.
    • ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆகிய இரண்டு பணிகளுக்கும் ஆண், பெண் ஆகிய இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

    தருமபுரி,

    தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இச்சேவையில் பணிபுரிய ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் ஆட்சேர்ப்பு முகாம் வருகின்ற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று தருமபுரி மாவட்ட பெரியார் மன்றத்தில் நடைபெற உள்ளது.

    தகுதியுள்ள ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த திட்ட மேலாளர் ரஞ்சித் மற்றும் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    ஓட்டுனர்களுக்கு 10 மண் வகுப்பு தேர்ச்சி மற்றும் அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாத ஊதியம் ரூ.14,766 (மொத்த ஊதியம்) வயது நேர்முகத் தேர்வு அன்று 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் உயரம் 162.5 சென்டிமீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

    கனரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ச் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.மாத ஊதியம் ரூ.14,966 ( மொத்த ஊதியம்). வயது நேர்முகத் தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயது மிகாமலும் இருக்க வேண்டும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆகிய இரண்டு பணிகளுக்கும் ஆண், பெண் ஆகிய இருபாலரும் கலந்து கொள்ளலாம். தேர்வு செய்யும் நபர்கள் 12 மணி நேர சுழற்சி முறையில் தமிழகம் முழுவதும் பணியமர்த்தப்படுவர். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • தமிழகத்தில இதுவரை 66 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது.
    • தனியார் நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.

    திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து வருகிற 5-ந் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. திருச்சி எஸ்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட உள்ள இந்த முகாமிற்கான முன்னேற்பாடு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆண்டுக்கு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை முதலமைச்சர் பெற்று தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 66 இடங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி 1 லட்சத்து 4 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் 15-ந் தேதி சென்னையில் நடந்த விழாவில் ஒரு லட்சமாவது பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வருகிற 5-ந் தேதி திருச்சியில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×